Thursday, 20 December 2012

 
                              பாம்டம்
பாம்படம் என்பது ஒரு காதணி. காதில் உருவாக்கும் பெரிய துளையில் இதை மாட்டி இருப்பர். சிறுவயதிலேயே காது குத்தி அந்த சிறிய துளையில் பனை ஓலையை சுருட்டிவைத்து, குனுக்கு எனும் கனமான ஈயகுண்டை தொங்கவிட்டு, என்று பல முறைகளை கையாண்டு சிறிய துளையை கொஞ்சம் கொஞ்சமாக பெரிது படுத்துவர். இந்த முறைக்கு காது வடித்தல் என்று பெயர். இது திராவிடர் பண்பாட்டை சார்ந்ததாகும். கௌதம புத்தர் கூட காது வடித்திருப்பார்.. அவர் சிலைகளில் இதை காணலாம். இது திராவிடர்களுக்கிடையேயான பொது வழக்கமாகும். 

ர்வதேச விருதுகள், தேசிய விருதுகள் என்று பல விருதுகளை பெற்ற பிரபல ஓவியரும் சென்னை கவின் கல்லூரி(madras fine arts college) முன்னாள் முதல்வரும் எனது இனிய நண்பருமான ஓவியர் சந்ரு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் பாம்படம் பற்றியும் அதன் வடிவ சிறப்பைப் பற்றியும் அவர் சொன்ன சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாம்படத்தின் வடிவமைப்பு (design) வேறு எந்த நாகரீகத்திலும் பார்க்க முடியாத ஒன்று. பந்து, கனசதுரம், முக்கோணம், வளையம் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்களும் கொண்ட வடிவயியல் உருவங்களால் (geometrical figures) செய்யப்பட்டிருக்கிறது. 
இது போன்று வடிவமைக்கப்பட்ட ஓர் அணிகலன் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை என்று ஓவியர் சந்ரு சொன்னார். நமது செவிமடலின் கீழ் பகுதியில் உள்ள சில புள்ளிகள் அழுத்தப்பட்டால் மூளையின் நினைவாற்றல் செல்கள் தூண்டப்படும் அதனால் நினைவாறல் சக்தி அதிகரிக்கும் என்பது வர்மகலை பாடம். இந்த கருத்து இன்றைய அறிவியலாலும் நிருபணமாகியிருக்கிறது. அந்தகாலத்தில் பள்ளிகூடத்தில் சரியாக படம் படிக்காத மாணவனை தோப்புகரணம் போடும்படி ஆசிரியர் சொல்வாராம். இந்தசெய்தியும் எனது பாட்டியின், அம்மாவின் நினைவாற்றல் திறன்களும் என் நினைவிற்கு வந்து போகிறது. இப்படி உடல் ரீதியான மருத்துவ தன்மையும் கலை அம்சத்தில் ஒரு தனித்துவமும் (uniqe) ஒருங்கே அமையும் விதத்தில் பாம்படத்தை வடிவமைத்த நமது முன்னோர்களின் அறிவு செழுமையை என்னவென்று சொல்வது. 
ஒரு பறவை அல்லது பாம்பு போல தோற்றம் அளிக்கும்.அரிதுளுவன், பன்னீர் செம்பு, தாமரை கால் ,சுண்ணாம்பு கலயம் என்று பாம்படத்தில் பல வகைகள் உண்டு. வெகு சில பாட்டிமார்கள் மட்டுமே பாம்படம் அணிந்து இன்று நம்மோடு இருகிறார்கள் ..இன்னும் சிலவருடங்கள் கழித்து போனால் இதை நாம் புகைபடத்தில் மட்டுமே நாம் காணமுடியும் .